Thursday, September 26, 2013

ஒரு தடவை என் friend ஒருத்தன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல...........அவன் அடுத்த நாள் வந்த உடனே................
"என்னடா ஆச்சு? ரெண்டு நாளா காணோம்............"
"என் பைக்கை காணோம் டா"
"போலீஸ்-ல complaint கொடுத்தியா?"
"ம் ம் கொடுத்தாச்சு............"
"சரி விடு இதுலயும் ஒரு நல்ல விஷயம் இருக்கு........."
"என்னடா?"
"நல்ல வேளையா உன் வண்டி தொலையும் போது நீ அங்க இல்ல..........."
"ஏன்?"
"பின்ன.............இருந்திருந்தா நீயும் இல்ல தொலைஞ்சுருப்ப...........ஹி ஹி ஹி........"
"ஐய்ய்ய்ய்ய்யோ...........சாமி காப்பாத்து இவன்கிட்ட இருந்து................."

வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பி
தாயின் குரல் கேட்டு கவலைகள் மறந்து
தாயின் முகம் பார்த்துவிட்டு
அவள் மடியில் உறங்க நினைத்தேன்

தாயின் குரலை தொலைபேசியில் கேட்டு கண்கலங்கி
தாயின் முகத்தை கணினியில் பார்த்துவிட்டு
கணினியின் மடியில் தான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்...

வெளியூரில் வேலை பார்க்கும் அனைவரின் நிலையும் இது தான்.

ஏன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சாப்பிட போ கூடாது?
=========================================

என்ன சாப்டறிங்க சார்? டீ, காபி , ஜூஸ் , சோடா...?
டீ கொடுங்க..

சிலோன் டீ, கிரீன் டீ , ஹெர்பல் டீ , ஐஸ் டீ ..இதுல எது வேணும் சார்?
சிலோன் டீ ப்ளீஸ்..

எப்படி குடிக்க விரும்பறிங்க.கருப்பு அல்லது வெள்ளை?
வெள்ளை.

காச்சிய பால் அல்லது பால் பவுடர்?
பால்.

ஒட்டக பால், மாட்டு பால் , ஆட்டுப்பால்?
மாட்டுப்பால்.

இனிப்புக்கு சக்கரையா தேனா? சார்.
சக்கரை

கிழங்கு சக்கரை அல்லது கரும்பு சக்கரை?
கரும்பு சக்கரை.

எந்த நிற சக்கரை ,வெள்ளையா, பழுப்பா , மஞ்சளா சார் ?
ஆணியே புடுங்க வேண்டாம்..நான் கேட்ட டீ ய மறந்துரு.போய் கொஞ்சம் தண்ணி கொண்டு வா குடிக்க.

சாதாரண தண்ணியா இல்ல மினரல் வாட்டர் ரா? சார்.
மினரல்.

எந்த மார்க்? சார் வேணும்..
ஆளவிடு, இங்க சாப்பிட வந்ததுக்கு அப்படியே தாகத்துல செத்து போறேன்.

Wednesday, September 25, 2013

கடந்த ஒரு வாரத்துல,
1,38,643 பேர் பாஸ்போட்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க.
1,32,530 பேருக்கு பார்போர்ட் கொடுத்திருக்காங்க ...
அப்படின்னா,
எல்லோரும் வெளிநாட்டுக்குப் போயிட்டா,
நான் ஒருத்தன் எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்???
ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்

Monday, September 23, 2013

கணவன் : எங்க கம்பெனில ஒர்க் பண்ற யாராவது சர்வீஸ்ல இருக்கும்போது செத்துப்போயிட்டா அவங்க குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் குடுக்கறாங்களாம்.
மனைவி : நடக்காததப் பத்தியெல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க. அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க. நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தேன்...
"டேய் மச்சி ... நான் சைதாப்பேட்டை பக்கமாதான் போறேன் ... அங்கே உன்னை டிராப் பண்ணிடுறேன் ... என் கூட பைக்ல வர்றியா?"
வீட்டிற்கே வந்து அழைத்தான் என் நண்பன்.
நானும் நம்பி ஏறினேன்.
பாதி தூரம் வந்திருப்போம் ... வண்டி நின்று விட்டது.
"கொஞ்சம் இறங்கு"என்றவன், நான் இறங்கியதும் வேகவேகமாக இறங்கி, பின் சக்கரத்தின் காற்றை திறந்துவிட்டான்.
எனக்கு பகீரென்றது.
"டேய் ... என்னடா பண்ற?"
"ஒண்ணுமில்லை மச்சி ... வண்டியில பெட்ரோல் இல்லை"
அடுத்த பெட்ரோல் பங்க் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
"அதுக்கு ஏண்டா காற்றை திறந்து விட்ட? ... இப்போ வண்டிய தள்ளிட்டு போறதுக்குக்கூட கஷ்டமா இருக்குமே?"
"அது ஒண்ணுமில்ல மச்சி ... பெட்ரோல் இல்லாம ரோட்டுல வண்டிய தள்ளிட்டு போறத பார்க்குறவங்க கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க ... ஆனால், பஞ்சர் ஆன வண்டிய தள்ளிட்டு போனா அய்யோ பாவம்னு நம்ம மேல பரிதாபமாப்படுவாங்க ... அதான்"
"அடக் கடவுளே ... வண்டியில பெட்ரோல் இல்லைன்னா என்னை ஏண்டா கூட்டிட்டு வந்த ... நான் பஸ்ல போயிருப்பேன்ல ... எனக்கு அவசரமா ஆபிஸ் போகணும்"
நக்கலாக‌ என்னைப்பார்த்து சிரித்தபடி சொன்னான்,
"நான் தனியா வண்டிய தள்ளிட்டு போக முடியுமா? ... அதனாலதான் ... ப்ளீஸ் ... கோவிச்சிக்காம கொஞ்சம் பின்னாடியே தள்ளிட்டு வாயேன்"
பிச்சைக்காரன் : ஐயா..! டீ குடிக்க எட்டு ரூவா தாங்க ஐயா.
தானாகீனா : ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும் சேர்த்துதான்யா
தானாகீனா: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா?
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம் தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன் !!!

என்னை யாரும் மதிக்கறது இல்லை" , "நான் இருக்கேனா செத்துட்டேனான்னு கூட யாரும் கவலை படுவதில்லை " - இப்படி பொலம்பரவங்கள பாத்திருக்கோம் - அவங்களுக்கு ஒரு அட்வைஸ் ...
நீங்க ஒரே ஒரு தவணை கிரெடிட் கார்டு பில் கட்டாம இருந்து பாருங்க ....
Kozhikoden Biriyani - Malabar style chicken biriyani.



Saturday, September 21, 2013

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.
***************­***************­*************
1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்
2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .
3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்...
4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக
அதிசயம்
7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்
8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்
9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
11. செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்
12 . விகடன் குழும பத்திரிக்கைகளில­் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருந்தால் அது உலக அதிசயம்
13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருந்தால் அதிசயம்
14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருந்தால் அது உலக அதிசயம்
15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ்
மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதித்தால் அது உலக மகா அதிசயம் .
16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுத்தால் அது உலக அதிசயம்
17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் அது உலக அதிசயம்
18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம
கவலை தோய்ந்த முகத்துடன்,

காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டரை சந்தித்தார் நாராயணசாமி.

"இன்ஸ்பெக்டர் சார் ... 15 நாளைக்கு முன்னாடி ஷாப்பிங் போறேன்னு சொல்லிட்டு போன என் மனைவி இன்னும் திரும்பி வரலை ... நீங்கதான் எப்படியாவது கண்டுபிடிச்சிக் கொடுக்கணும்"

"அப்படியா ... அவரது உயரம் என்ன?"

"ம்ம்ம் ... எனக்கு சரியாகத் தெரியவில்லை சார்"

"ஒல்லியா ... குண்டானவரா?"

"ஒல்லியெல்லாம் கிடையாது ... நல்லா தின்னு கொழுத்து போயித்தான் இருந்தா"

"அவரது கண்கள் என்ன நிறம்னு சொல்லமுடியுமா?"

"சார் சார்... அதை நான் கவனித்ததில்லை"

"தலைமுடி என்ன நிறம்"

"அதெல்லாம் அப்பப்போ மாத்திப்பா சார் ..."

"என்ன உடை அணிந்திருந்தார்கள்?"

"சாரியோ... சுடிதாரோ ... ஏதோ ஒண்ணு போட்டிருந்தா சார் ... சரியா தெரியல"

"சரி... காணாம போன அன்னைக்கு எதுல வெளியே போனாங்க ... காரிலா?"

"ஆமா சார்"

"ஓ... அப்படின்னா கார் நம்பர், கலர், எந்த பிராண்டு கார் ... கொஞ்சம் விவரம் சொல்லுங்க"

"சார் ... அது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார். black audi A8 with supercharged 3.0 liter V6 engine generating 333 horse power teamed with an eight-speed tiptronic automatic transmission with manual mode. And it has full LED headlights, which use light emitting diodes for all light functions and has a very thin scratch on the front left Door"

என்றபடி "ஓ"வென அழ ஆரம்பித்தார் நாராயணசாமி.

அவரது உணர்வை புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் சொன்னார்,

"நாராயணசாமி கவலைப்படாதீங்க ... உங்க காரை எப்படியும் நான் கண்டுபிடிச்சிக் கொடுத்துடுறேன்"

Indian Dish!
1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு.

2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு.

3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு.

4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு.

5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு.

6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு.

7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும்.

8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும்.

# இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை.
கடவுள் எப்போ டென்சன் ஆவார் தெரியுமா...?
.
.
.
.
.
.
.
.
கல்யாணம்
பண்ணாமலேயே
ஒரு பொண்ணு கர்ப்பம்
ஆகிறபொழுது,
அவங்க அம்மா
’அட கடவுளே,
இப்படி பண்ணிட்டியே”ன்னு
சொல்வாங்க பாருங்க....
அப்பதான் டென்சன் ஆவாராம்..... ???

Friday, September 20, 2013

இப்ப தான் ஒரு கொசுவ
வெளிய தொரத்தி கதவ
தாப்பா போட்டேன் மழையில்
நனைந்து சாகட்டும் . .

அப்ப தெரியும் வீட்டோட அருமை .

W____________?????
நீண்ட நாட்களுக்குப் பின் நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏண்டா மச்சி ... எப்படி இருக்க? ரொம்ப நாளா போன் பண்ணவே
இல்லை?" கேட்டேன் நான்.

"ஒண்ணும் இல்லைடா ... பேலன்ஸ் இல்லைடா!"

"அட கூறுகெட்டவனே ...பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ... தூண்லயோ இல்லை குட்டி சுவத்துலயோ சாய்ஞ்சுகிட்டு பேச வேண்டியதுதானே!"

#"டமார்"னு சத்தம் கேட்டுச்சி ... போனை உடைச்சிட்டான் போலிருக்கு!!!