Saturday, September 21, 2013

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு.

2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு.

3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு.

4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு.

5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு.

6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு.

7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும்.

8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும்.

# இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை.

No comments:

Post a Comment