Thursday, October 31, 2013

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!

நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
பில் கேட்ஸ் அவர்கள் ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிற்கிறான் "தமிழன்"
உயரமான மலை உச்சியில்
நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி நம்ம நாராயணசாமி கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளே.. .!என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாகஅவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்குஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே....

எல்லாம் சரி. அவளை ஏன் முட்டாளாகப் படைத்தாய் ?
-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி
நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி
ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!
காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே
எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி‘ லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,
பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,
ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!
வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி
கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை
மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!
”என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.
என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்
கணவன் முழிக்க,
மனைவி சொன்னள்`
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Monday, October 28, 2013

அப்பா : டேய் நா சொல்ற பேச்சை கேளுடா
மகன் : நோ நா கேக்க முடியாது ... நா கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்
அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு. உன்ன B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி தெரு தெருவா அலைய விட்டு இருக்கனும்

#அரசியல்_நாகரீகம்
ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க....
"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது"
உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே"
டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,
"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது"
அந்தப்பொண்ணு,
"சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்"
டீச்சர்,
"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."
" நீங்க கேளுங்க"

நம் வீட்டில் நடக்காத வரை எதுவுமே நமக்கு செய்திதான்....
இரவு நேரம். சிக்னல்ல டூவீலர நிறுத்தியிருந்தேன். அந்த கேப்புல ஒரு அன்பர் வந்து, “சார் காளியப்பா ஆஸ்பத்திரி வரைக்கும் லிப்ட் கொடுங்க”னு கேட்டு வண்டியில ஏறிகிட்டார். க்ரீன் சிக்னல் விழுந்ததும் கிளம்பிட்டோம். அப்புறம்…
“வண்டியில ஹெட்லைட் போடாம இருக்கீங்க…”
“அது உடைஞ்சி பத்து நாளாச்சு…”
“சார்.. சார்.. இப்படி திரும்பும்போது இன்டிகேட்டர போடுங்க..”
“அது நாலு நாளா எரிய மாட்டேங்குது சார்…”
“அய்யோ… எதிர்ல போற வண்டிமேல இடிச்சிட பாத்தீங்களே. தள்ளி வரும்போதே பிரேக்க பிடிக்க கூடாதா?”
“நான் பிடிக்க மாட்டேன்னா சொன்னேன். அது சரியா பிடிக்கல…”
“இப்படியா சார் ஓவர்டேக் பண்றது.. ஹாரன் அடிங்க...”
“வச்சிக்கிட்டா வஞ்சன பண்றேன்.. அடிக்க மாட்டேங்குது...”
“அப்பாடி… இப்படி ஸ்பீட் பிரேக் மேல வேகமா ஏறாதீங்க சார். தூக்கிப் போட்ரும்…”
“கண்ணு சரியா தெரியல. கண்ணாடி ஆர்டர் பண்ணியிருக்கேன்..”
“நிறுத்துப்பா வண்டிய… நான் இறங்கிக்கறேன்..”
“ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னீங்க..”
“அட்மிட் ஆகுறதுக்கு இல்லப்பா… ஆளவிடு..”

# சே… இதுக்கெல்லாமா பயப்படுவாங்க?
நேற்று மாலையில்...
காற்று வாங்குவதற்காக எங்க ப்ளாட்டின் மொட்டைமாடிக்கும் போனேன்.
அங்கே, பக்கத்து வீட்டுக்காரன் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்.
"ஏண்ணே ... என்ன ஆச்சு ... நீங்க போய்..."இழுத்தேன்.
"வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிகிட்டேன் தம்பி"
"ஏண்ணே???"
"1000 பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பெரியவஙக் சொல்லியிருக்காங்களே ... நீங்க என்ன பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு என் வீட்டுக்காரி எதார்த்தமாதான் கேட்டா"
"ஓ...அப்போ நீங்க பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணுனீங்களா??"
"ஆமா... ஒரே ஒரு பொய்"
"என்ன பொய்?"
"அவளை எனக்கு பிடிச்சிருக்குன்னுதான்"

Friday, October 25, 2013

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்
அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க

அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது
நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது.
முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள
குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.
மனைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?
கணவன் ; .........!
மனைவி ; கேட்குறேன்ல சொல்லுங்க
கணவன் ; .........!
மனைவி ; ஹலோ, கேட்குறது காதுல விழுவதா இல்லையா?
கணவன் ; .........!
மனைவி ; அட சொல்லுங்க அழகா இருக்கேனா?
கணவன் ; ரதி மாதிரி இருக்க.
மனைவி ; (கோபமாய்) யாருயா அவ ரதி ??
கணவன் ; பார்த்தியா நான் சும்மா தானே இருந்தேன் . உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட..
போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு ?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு
போடா வெங்காயம் - இப்ப போங்க வெங்கயாம் அளவுக்கு மதிப்பு கூடிப்போச்சு - ஆனியன் டாப் 12
1, சரிந்துவரும் பணமதிப்பை சரி செய்ய 300 டன் வெங்காயத்தை உலக வங்கியிடம் அடகு வைக்க முடிவு....
2. நாட்டு மக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொள்ளவும்.. நிதியமைச்சர் உருக்கம்...
3. விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 5கிலோ வெங்காயம் பிடிபட்டது...
4. வெங்காயம் வாங்க லோன் வசதி.. அனைத்து வங்கிகளும் முடிவு..
5. சென்னையில் துணிகரம் "பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 10 கிலோ வெங்காயம் திருட்டு...
6. 5 கிலோவிற்கு மேல் வெங்காயம் வைத்தி ருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்..
7. உலக கோடிஸ்வரர்கள் மாநாட்டில் ஆம்லேட்டுக்காக 30 கிலோ வெங்காயம்!!! சாமானியர்கள் ஏக்கம்..
8. வாரம் 1 கிலோ வெங்காயம் தருவதாக சொன்ன நிதி நிறுவனம் ஓட்டம்..ஏமாந்த மக்கள் கண்ணீர்...
9. வெங்காயத்தை அடகு வாங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்...
10. பாகிஸ்தானிலிருந்து போலியாக புழக்கத்தில் விடப்படும் வெங்காயத்தை கண்டறிய நவீன கருவி வாங்கப்படும்
11/ பிரிட்டனில் நடந்த உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கலில் 5டன் வெங்காயம் வென்ற அதிர்ஷ்டசாலி...
12. ஐபிஎல் வீரர்கள் சம்பளத்திற்கு பதில் வெங்காயம் தர வேண்டும் கேப்டன்கள் வேண்டுகோள்....
என் அப்பாகிட்ட புது பைக் வாங்கி குடுங்கப்பானு தான் கேட்டேன்.
உடனே அவர், டேய் கடவுள் நமக்கு ரெண்டு கால்கள் எதுக்கு குடுத்து இருக்காருனு உனக்கு தெரியுமானு கேட்டார்.
உடனே நான் சொன்னேன், ஓ தெரியுமே. ஒரு கால் கியர் போட, இன்னொரு கால் ப்ரேக் புடிக்கனு சொன்னேன்.
‪#‎யாருக்கிட்ட‬ எங்ககிட்டயேவா?! முடியுமா?!

Wednesday, October 23, 2013

மிஸ்டர் X ஒரு மன நல மருத்துவரைச் சந்தித்தார்.
"டாக்டர் , எனக்கு வாழவே பிடிக்கவில்லை , எல்லாமே negative ஆக நடக்கிறது ".
டாக்டர் சொன்னார்,
"கவலைப் படாதீர்கள் , எல்லார் வாழ்க்கையிலும் சில positives இருக்கும் . அதை நினைத்து நாம் சந்தோஷப் படலாமே ! நன்றாக யோசியுங்கள் , உங்களுக்கும் ஏதாவது positive இருக்கும்"
மிஸ்டர் X ஒரு நிமிடம் யோசித்து , பின் மெதுவாகச் சொன்னார்,
"ஆமா டாக்டர் , எனக்கு blood டெஸ்ட் பண்ணப்ப "HIV positive என்று சொன்னார்கள் " !
நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )
"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கண்டா ..... "
"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"
"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "
"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"
"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "
"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"
"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "
(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )
"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "
"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி ......"
"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "
"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "
"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"
"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"
"டேய் ............நீ சென்னைல இருக்க , நான் இங்க கோயமுத்துர்ல இருக்கண்டா "
"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.
ஸோ, 2 சை = தோசை.
தமிழில் "மயிர்"னு சொன்னா கெட்ட வார்த்தை...
இங்கிலிஷ்ல
"Shit"னு
சொன்னா டீசன்டாம்....
.
.
.
.
.
.
உங்க ஆங்கிலப் புலமையில தீய
தான் வைக்கனும்.
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த
பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ
திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி.
அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா
தானா லைட் நின்னுடுச்சி.
என்னா அதிசயம் பார்த்தியா..?
அந்த சாமியார் சொன்னது சரியாய் போச்சு..
பொண்டாட்டி:- என்ன சொன்னார்..?
புருஷன்:-உங்க வீட்லே அதிசியம் நடக்குன்னு சொன்னார்.,
பொண்டாட்டி:-யோவ்.., அறிவுகெட்ட முண்டம்.
தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து
ஒண்ணுக்கு இருந்துட்டு
கதை சொல்றியா,
பேசாமல் படுய்யா..
புருஷன்:- !!!!!!!??????????????
ஆயிரம் ரூபாய் 
இலஞ்சம் வாங்கினேன்...
கைதானேன்...!
பத்தாயிரம் ரூபாய் 
இலஞ்சம் கொடுத்தேன்...
விடுதலையானேன்..?
சில நிமிடங்கள் இன்பமாயிருக்க
"தம்" அடிக்கலாம் !!!
சில மணி நேரம் இன்பமாயிருக்க
"தண்ணி" அடிக்கலாம் !!!
சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!
வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க
இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !
சில நிமிடங்கள் இன்பமாயிருக்க
"தம்" அடிக்கலாம் !!!
சில மணி நேரம் இன்பமாயிருக்க
"தண்ணி" அடிக்கலாம் !!!
சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!
வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க
இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !

Saturday, October 19, 2013

இரண்டு சாப்ட்வேர் இஞ்ஜினியர்களும்,இரண்டு பிச்சைகாரர்களும் சந்தித்து கொண்டால்...
ஒரே கேள்விய தான் கேப்பாங்களாம் !
அது என்ன கேள்வின்னு சொல்லுங்க பார்ப்போம்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
’Which platform are you working on ?’
என்ன கொடும சார் இது...
அமெரிக்கவில் துங்குவதற்கு முன் கணவன் மனைவிக்கு கூறுவது "good night my love
இங்கிலாந்தில் "sleep well my love "
ஆஸ்திரேலியாவில் "sweet dreams my love "
நம்ம நாடுகளில் - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா
"உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா..?" 

"கண்டிப்பா இருக்கே." 

"அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.' 

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" 

"அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே.."

Tuesday, October 15, 2013

.Boy: டிரஸ் சூப்பர்! 
Girl: தேங்ஸ் 
Boy: லிப்ஸ்டிக் சூப்பர்! 
Girl: தேங்ஸ் 
Boy: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்! 
Girl: தேங்ஸ் டா
Boy: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
."வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

புதுமொழிகள்


1.ஒரு பானை சோற்றுக்கு
அரை பானை குழம்பு....

 
2.தம்பி உடையார்
அண்ணன் செட்டியார்.


3.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.
உன் பொண்டாட்டி உன்னை சந்தேகப்படுவாள்.


4.நல்ல மாட்டுக்கு ஒரு கிலோ புண்ணாக்கு.
 

5.தோல் கொடுப்பான்
கறிக்கடை பாய்.

 
6.காற்றுள்ளபோதே தூங்கிவிடு
கரண்ட் போனா தூக்கம் வராது....
Question : In a forest 10 people are going suddenly a loin came and killed 6 people . But did not do anything on those 4 people. why?
Answer : Because they are lion's club memebers.
LKG boy1:mappullai enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
School life: +2 varai
College life: Padikkumvarai,
Love life: Kalyanam varai,
"But" Namma friendship: February 30 varum varai.......
A man is having Rs.200 but he gave 100 Rs each for 4 beggars


Intha kanakku sariya thappa?



Thappilla..., it is correct.




Eppadi?




Because,

4 peruku nallathu panna ethuvume thappilla..
A man is having Rs.200 but he gave 100 Rs each for 4 beggars


Intha kanakku sariya thappa?



Thappilla..., it is correct.




Eppadi?




Because,

4 peruku nallathu panna ethuvume thappilla..
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?

Sunday, October 13, 2013


Ice Cream Lovers Hit Like

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்...

Friday, October 11, 2013

உடம்ப இளமையா வைச்சுக்க இன்னைக்கு யோகா போனேன்.....
முதல் கண்டிசன்....
சாப்பாட்ட குறைக்கனுமாம் அதும் மூணு வேளைக்கு தான் சாப்படனுமாம்...
அடுத்த வாரம் வர மாட்டேனு சொல்டிட்டு வந்துடேன்.....?
கணவன் ; நாளைக்கு அம்மா வராங்க.
மனைவி ; என்னது அவங்க வந்துட்டு போயே நாலு மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிறு கிழமை வேற நான் லேட்டா தான் எந்திரிப்பேன். என்ன சமைக்கிறதுனு தெரியலை.ஆட்டோ டிரைவர் இருக்க மாட்டான். எத்தனை நாள் இருப்பாங்க?
கணவன் ; நான் சொன்னது உங்க அம்மா வராங்கனு.
மனைவி ; அட அத ஏன் நீங்க முன்னாடியே சொல்லலை. எங்க அம்மாவ பார்த்து 2மாசமாச்சு. ஆட்டோக்காரர் நம்பர் இருக்கு. ஸ்டேசன்க்கு போயி கூட்டிட்டு வர சொல்லனும். நாளைக்குடிபன் செஞ்சி போடனும். ரொம்ப நாளைக்கு இருக்க வைக்கணும்.
நீதி; மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னா சிகெரட் பிடிக்கறத விட்ரணும்"
"சரி விட்ர்றேன்"
"தண்ணி அடிக்கறத விட்ரணும்"
"சரி விட்ர்றேன்"
"கிரிக்கெட் பார்க்கறத விட்ரணும்"
"சரி விட்ர்றேன்"
"ஃப்ரென்ட்ஸோட ஊர் சுத்தறத விட்ரணும்"
"சரி விட்ர்றேன்"
"நைட் கிளப் போறத விட்ரணும்"
"சரி விட்ர்றேன்"
"அப்புறம் வேற என்னெல்லாம் விட்ர்றுவே?"
"உன்ன கல்யாணம் பண்ணிக்குற எண்ணத்த விட்ர்றேன்"

Thursday, October 10, 2013


என்ன ஒரு கண்டுபிடிப்பு!
ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்.

மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

அவ்வகுப்பில் இருந்த நாராயணசாமி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"
நாராயணசாமி வேலை தேடிக் கொண்டு இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்

தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"

நாராயணசாமி : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்"

Wednesday, October 9, 2013

தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..

இவனுக்கு ஏதும் பிரச்சனை
என்றால் மற்ற நண்பனுக்கு
புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.

ஒரு நாள் புறாவின் காலில்
எதுவும் இல்லாமல் ஒருத்தன்
அனுப்பி இருந்தான்..

உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனைப்பி இருக்க??
என்று கேட்டான்"

அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான் "இல்ல மச்சி சும்மா நீ இருக்கீயான்னு மிஸ்ட் கால் பண்ணுணன் என்றானாம்"
ஒரு போன் வந்துச்சி...

எதிர்முனையில் ஒரு பெண்....

"வணக்கம் சார் ... உங்களுக்கு பங்கு வர்த்தகத்துல ஈடுபட விருப்பம் இருக்கா ... நாங்க ஹெல்ப் பண்றோம்"

"நான் ஏற்கனவே அந்த "லைன்"ல தாம்மா இருக்கேன்"

"அப்படியா !?"

"ஆமா ... எப்போ டீ குடிக்க போனாலும், கூடவே ஒரு நண்பரையும் அழைச்சிகிட்டு போவேன் ... ஒரு டீ வாங்கி ரெண்டு பேரும் பங்கு போட்டுக்குவோம்"

"டொக்" சத்தம் மட்டும் வந்தது.

#மனுஷன் சிங்கிள் டீக்கு வழி இல்லாம அலையுறான் ... பங்குல சேரணுமாம்!

Tuesday, October 8, 2013

சமீபத்துல ஒரு மீட்டர் போட்ட ஆட்டோல போய்ட்டு இருக்கும் போது ஆட்டோக்காரரிடம் பேச்சு குடுத்தேன்..!!
அண்ணே.. எப்போல இருந்து எல்லா ஆட்டோக்கும் மீட்டர் கட்டாயம்னு கேட்டேன்..
கேட்டது தான் தாமதம் மனிதர் பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார்.. மீட்டர் போட்டதுல இருந்து வருமானமே போச்சி.. கிண்டில இருந்து பல்லாவரம் போனா கூட 150 ருபாய் வர மாட்டேங்குதுன்னு சொன்னாரு..
அண்ணே போன வாட்டி சென்னை வரும் போது லீ மெரிடியன்ல இருந்து ஆலந்தூர் போறதுக்கு 150 ருபாய் கேட்டாய்ங்க உங்க ஆளுங்க.. தர முடியாதுன்னு வேற ஆட்டோக்கு போனா எந்த ஆட்டோவும் போக கூடாதுன்னு சிக்னல் குடுக்குறாங்க.. இது மட்டும் நியாயமான்னு கேட்டேன்..!!
என்னப்பா ஒரு 30 ருபாய் அதிகமா கேட்டா இப்படி சீன் போடுறீங்க... அரசியல்வாதிங்க எல்லாம் கோடி கோடியா கொள்ளை அடிக்கிராங்க.. அதக்கண்டுக்கம மூடிட்டு போறீங்க... நாங்க கேட்டா மட்டும் ஏன் உங்களுக்கு வயிறு எரியுதுன்னு கேக்குறார்..!!
இதுல என்ன மேட்டர்னா.. ஆட்டோகாரங்க மட்டும் இல்லை.. சாதாரண பொதுமக்கள் கிட்டயும்.. அரசியல்வாதிங்க கோடி கோடியா அடிக்கிறாங்க.. நாங்க சின்னதா தப்பு பண்ணுனா என்ன தப்புங்கிற மனநிலை வந்துட்டுது மக்கள்கிட்ட..!!!
## இது ஒரு மோசமான முன்னுதாரனமாகிவிடும்.. நாடு என்பது நாமும் சேர்ந்ததே.. நாம 10 ருபாய் சம்பாதிக்க ஒரு ருபாய் லஞ்சம் குடுத்தா.. இன்னொருத்தன் 1000 ருபாய் சம்பாதிக்க 10 ருபாய் லஞ்சம் குடுப்பான்.. விலைவாசில இருந்து.. ஆட்டோ, பஸ், ரயிலுன்னு எல்லாத்துக்கும் ஒரு செயின் ரியாக்‌ஷன் இருக்கு..!!!
மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.
கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''
""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.
1.ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)
2.எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க?)
3.எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)
4.சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )
5.சாப்புட என்ன வேணும்?
எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)
6.எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீவரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)
7.காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)
8.இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.
( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைல வெடிச்சுரும்)
ஐஓபி பேங்க் செக் ஒண்ணு கைல இருந்துச்சி ...
என்னோட அக்கவுண்ட் ஐபி யில ...
உடனடியா பணமும் தேவை ...
"சார் ... நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?"
என்கொயரி கவுண்டர்ல இருந்தவரிடம் கேட்டேன்.
"மூணு நாள் ஆகும்"
"சார் ... ஐஓபி பேங்க் பக்கத்து பில்டிங்ல தானே சார் இருக்கு ... அது எப்படி சார் மூணு நாளாகும்? ... நீங்க சொன்னீங்கன்னா நானே கொண்டு போய் கொடுத்திடுறேன் ... இன்னைக்கு பணம் கிடைக்குமா?"ன்னு கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்,
"எல்லாத்துக்கும் ஒருவழிமுறை இருக்குது சார் ... இப்ப நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த முடிப்பாங்க? வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியத பார்க்கறதில்ல, அதுமாதிரித்தான்"
பரமா ... ஒரு செக்குக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா..!

Monday, October 7, 2013



"கல்யாணம் பண்ணி வைங்க"ன்னு பொண்ணு கேட்டா பொண்ண பெத்த மாமனாரு "போய் வேலை வாங்கிட்டு வா"ன்னு சொல்லுவாரு.

சரி தங்கி வேலை தேடலாம்ன்னு சென்னைல போய் வீடு கேட்டா வீட்டு ஓனரு,"பேச்சுலருக்கு வீடு இல்ல,போய் கல்யாணம் பண்ணிட்டு வா"ன்னு சொல்லுவாரு.

அப்பறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்?

Sunday, October 6, 2013

Democracy.
Indian people
A lady went to the police station to file a report for her missing Husband

Lady : I lost my Husband
Inspector : What is his height..??

Lady : I never noticed
Inspector : Slim or healthy..??

Lady : Not slim can be healthy
Inspector : Color of eyes..??

Lady : Never noticed
Inspector : Color of hair..??

Lady : Changes according to season
Inspector : What was he wearing..??

Lady : suit/casuals I don’t remember exactly
Inspector : Was somebody with him ??

Lady : Yes my Labrador dog, Calvin, tied with a golden chain, height 26 inches, healthy, blue eyes, blackish brown hair, his left foot thumb nail is slightly broken, he never barks, wearing a golden belt studded with blue balls, he likes non veg food, we eat together, we jog together & the lady started crying

Inspector : Let’s search for the dog first .
TWO

DAYS

IS

NOT

ENOUGH

TIME

FOR

A

WEEKEND.

இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

இறந்த பின் FACEBOOK பாக்கணுமா ??? கண் தானம் செய்வீர்.....!!

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன?
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன?

//நாம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயம் //

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா..?
..............................

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..
................................................................................

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.


கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...
......................................................................................

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.


நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்