Thursday, October 31, 2013

உயரமான மலை உச்சியில்
நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி நம்ம நாராயணசாமி கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளே.. .!என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாகஅவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்குஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே....

எல்லாம் சரி. அவளை ஏன் முட்டாளாகப் படைத்தாய் ?
-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..

No comments:

Post a Comment